May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

சமையல் கியாஸ் விலை ரூ.50 உயர்வு

1 min read

Cooking gas price hiked by Rs 50

15/2/2021

சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது.

கியாஸ் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் மாற்றம் ஏற்படும்போது அதற்கு தகுந்தபடி இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் தினசரி பெட்ரோல், டீசல் விலை மாறுகிறது. சமையல் கியாசை பொறுத்தவரை2 வாரத்திற்கு ஒரு முறை விலை மாற்றி அமைக்கப்படுகிறது.

ரூ.50 உயர்வு

அதன்படி இன்று சமையல் கியாஸ் விலையை மாற்றி அமைத்து மத்திய பெட்ரோலிய துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மானியம் கொண்ட சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு டிசம்பர் 16-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்து வந்தது.

இந்தநிலையில் இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.735 ஆக இருந்தது. இப்போது மேலும் ரூ.50 உயர்த்தி இருப்பதால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.785 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமையல் கியாஸ் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.