May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

“மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பு” -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

1 min read

“Metro Rail Fare Reduction” -Edappadi Palanisamy Announcement

20.2.2021

சென்னையில் மெட்ரோ ரெயில் கட்டணம் குறைக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&

மெட்ரோ ரெயில்

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைந்து முதல்அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னையில் மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் ரூ.70-இல் இருந்து ரூ.50 -ஆக குறைக்கப்பட்டுள்ளது.

5 கி.மீட்டர் வரை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண குறைப்பு நாளை மறுநாள் (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.