May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் கொரோனா பரவல் சற்று உயர்வு

1 min read

Corona distribution in India is slightly higher

20.2.2021

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த 2 நாட்களை விட சற்று உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக பெருமளவில் குறைந்து வந்துள்ளது. ஆனாலும் கடந்த 2 நாட்களை விட இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து காணப்படுகிறது.
இந்திய அளவில் கொரோனா பரவல் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:&
கடந்த 24 மணிநேரத்தில் அதாவது நேற்று (வெற்றிக்கிழமை) 13,993 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இது முந்தைய நாள்( வியாழக்கிழமை) 13,193 ஆகவும், கடந்த புதன்கிழமை 12,881 ஆகவும் இருந்தது.
இதுவரை நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 9 லட்சத்து 77 ஆயிரத்து 387 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் 10,307 பேர் கொரோனவில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். முந்தைய நாள் (நேற்று முன்தினம்) 10,896 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது வரை கொரோனாவால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரத்து 48 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 101 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 212 ஆக உயர்வடைந்து உள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்து 43 ஆயிரத்து 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரத்து 204 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.