May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 449 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 449 people in Tamil Nadu today

22/2/2021
தமிழகத்தில் இன்று 449- பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று 449- பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சசத்து 48 ஆயிரத்து 724- ஆக உள்ளது.

சென்னையில் இன்று 151- பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 6 பேர் இறந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 461- ஆக இருக்கிறது.

கேரளா

கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,037- ஆக உள்ளது. அந்த மாநிலத்தில் தற்போது கொரோனாவுக்கு 55,468- சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,105- ஆக உள்ளது.

டெல்லி

டெல்லியில் ஒரே நாளில் 128- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 157- ஆகும்.
தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,041- ஆக உள்ளது.

இந்திய அளவில்…

இந்திய அளவில் நேற்று ஒரே நாளில் 14,199 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,05,850 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 83 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,385 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,695 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,99,410 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடுமுழுவதும் கொரோனாவுக்கு 1,50,055 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.