நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலி
1 min read
19 people die after consuming illicit liquor in Nagaland
26.9.2026
நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 2 நாட்களில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கில் அமைந்துள்ள மாநிலம் நாகாலாந்து. இம்மாநிலத்தில் 1990ம் ஆண்டு முதல் பூரண மது விலக்கு அமலில் உள்ளது. ஆனாலும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது, கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 2 நாட்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தின் துவன்சங் மாவட்டத்தில் 11 பேரும்,மொகோக்சுங் மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து 2 நாட்களில் 19 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.