September 26, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மட்டுமே சமூகப் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை

1 min read
Social security scheme assistance will be provided only to Aadhaar-linked bank accounts.
25/9/2026
சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும் என்று தென்காசி மாவட்ட
ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.

சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் இந்திய அரசு வழங்கும் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு 2026 செப்டம்பர் மாதம் முதல் ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை மூலம் மட்டுமே உதவித் தொகை வழங்கும் முறை அமல்படுத்தப் பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, செப்டம்பர் மாதம் முதல் பயனாளிகளுக்கான நிதியுதவி அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும்.

அதன்படி, அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் முறையான நடவடிக்கைகள் மூலம் நிதியுதவி தடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றன.

வங்கி கணக்குடன் இது வரை தங்களது ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள் இன்றே தங்களது வங்கிக் கணக்குள்ள வங்கியினை அணுகி ஆதார் இணைப்பை மேற்கொள்ளமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம். மற்றும் தங்கள் பகுதிக்குட்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில்அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை பயனாளிகள் அணுகலாம்.

அங்கு தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களும், உதவியும் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப் படுகிறது. மேலும், வங்கிக் கணக்கில் உதவித் தொகை வரப்பெறாதவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. அவர்களுக்கான உதவித்தொகை வரப்பெறுவதை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும், பயனாளிகள் தங்களின் வங்கிக் கணக்குடன் ஏற்கனவே ஆதார் எண்ணை இணைத்திருப்பின், அந்த வங்கிக் கணக்கில் அந்த பயனாளிக்குரிய உதவித்தொகை வரவு வைக்கப்பட்டிருக்கும் என்ற தகவலும் இதன் மூலம் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *