May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடி கொகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

1 min read

Prime Minister Modi vaccinated Kokorona

1.3.2021

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது.

இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ‘பான் கார்டு’ உள்ளிட்டவைகள் கொண்டு ‘கோவின்’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி

இந்த நிலையில் டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்பட வேண்டாம். ஒன்றாக, இந்தியவை கொரோனாவில் இருந்து விடுவிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் மத்திய மந்திரி அமித்ஷாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

வெங்கையா நாயுடு

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இன்று கொரோனா முதல் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். இன்னும் சரியாக 28 நாள்கள் இடைவெளியில் இரண்டாவது கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன். அதுபோலவே, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதிவாய்ந்த மக்கள் அனைவரும் தாங்களாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு வெற்றி பெற ஒத்துழைப்புத் தர வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.