May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

“தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது”- ராகுல் காந்தி பேட்டி

1 min read

“Tamil Nadu is the leading state in India in terms of industry” – Rahul Gandhi interview

1.3.2021

“தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது” என்று ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் பிரசாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் தனது 3-வது கட்ட பிரசாரத்தை தென் மாவட்டங்களில் தொடங்கினார்.
இன்று ராகுல்காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் சர்ச் ரோடு பகுதியில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை அடிமைபடுத்த நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். தமிழகத்தின் பாரம்பரியம், தனித்தன்மையை பாதுகாக்க வேண்டியது தனது கடமை. என்று பேசினார்.

வசந்தகுமார் நினைவிடம்

பின்னர், அகஸ்தீஸ்வரம் சென்ற ராகுல் காந்தி, மறைந்த எம்.பி. வசந்தகுமார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, வசந்தகுமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினரை ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

அதன்பின்னர் மக்களிடையே உரையாற்றிய ராகுல் இன்று நம் தலைவர் வசந்தகுமாரை பற்றி நினைவு கூர்கிறோம். எதற்காக என்றால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், மற்ற அரசு அவரை மிரட்டினாலும் அஞ்சாமல் அவர் காங்கிரஸ் பின்னால் உறுதியாக நின்றதால் அவரை நினைவுகூர்கிறோம். அவர் எப்போதுமே பின்தங்கிய மக்களுக்காக, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள விளிம்புநிலை மக்களுக்கான உழைத்துக்கொண்டிருந்தார். ஏழை குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்தார். ஒரு குடும்பத்திற்கு திருமணம் செய்ய நிதி உதவியாக 10,000 ரூபாய் வீதம் 1,000 குடும்பங்களுக்கு உதவி செய்திருக்கிறார்.

விதவைகளுக்கு ஆசிரியர் வேலை வாங்கி கொடுத்திருக்கிறார். பல்வேறு நீர் நிலைகளை சீரமைத்திருக்கிறார். ஏழைகளுக்கு உணவு அளித்தவர். அவரை போன்ற வலிமை வாய்ந்த, திறமை வாய்ந்த, சக்தி படைத்த மனிதரை இழந்திருக்கிறோம் என நினைவு கூர்ந்தவர்,

காமராஜர்

நான் கவனித்ததில் காமராஜர்தான் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய முதல் இந்திய குடிமகன்.

அந்த நேரத்தில் இந்திய பொருளாதார மேதைகள் இலவச மதிய உணவு கொடுத்தால், பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் என்றார். ஆனால் காமராஜர் பொருளாதார நிபுணர்கள் சொன்னதை கேட்காமல், மக்கள் சொன்னபடி மதிய உணவு வழங்கினார். காமராஜர் முயற்சியால் தமிழகம் மாட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பெருமை காமராஜரை சாரும். அதுதான் தமிழகம் நாட்டின் வழிகாட்டி என கூறினேன் என்றவர், தமிழ் மொழி, கலாசாரம் பண்பாட்டை காப்பாற்ற நான் இருக்கிறேன். அனைத்து மொழி, கலாசாரம், மதங்களை காக்க நான் கண்டிப்பாக துணை நிற்பேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

தொடர்ந்து பிரச்சாரத்திற்கு இடையே இளைப்பாறும் விதமாக அச்சன்குளத்தில் சாலையோர கடையில் ராகுல் காந்தி நொங்கு சாப்பிட்டார். மேலும் சர்பத் குடித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.