May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 7ந் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்

1 min read

Union Home Minister Amit Shah will return to Tamil Nadu on the 7th

2.3.2021

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 7ந் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க.வினர் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று சட்டசபையை அலங்கரிக்க வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகிறார்கள். எனவே, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி மத்திய மந்திரிகள் அவ்வப்போது தமிழகத்துக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

7ந் தேதி

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரும் 7ந் தேதி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7ந் தேதி தமிழகம் வரும் அமித்ஷா நாகர்கோவிலில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.