November 29, 2026

Seithi Saral

Tamil News Channel

இத்தாலி பள்ளிகளில் புர்கா, நிகாப் அணியத் தடை- மீறினால் 1,000 யூரோ அபராதம்

1 min read

Ban on wearing burqas and niqabs in Italian schools – 1,000 euro fine for violations

28.11.2026
இத்தாலி பாராளுமன்றத்தில் கல்வி சீர்திருத்தம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு செனட் சபையில் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் அந்த மசோதா, பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது.

இதில் மசோதாவுக்கு 142 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 112 பேர் எதிராக வாக்களித்தனர். 4 பேர் வாக்கெடுப்பை புறக்க ணித்தனர். இதையடுத்து கல்வி சீர்திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி பள்ளிகளில் புர்கா-நிகாப் போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் 1,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மாணவி மைனராக இருந்தால் அவரது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் பொறுப்பாவார்கள்.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு வகுப்புகளில் வெளிநாட்டு வம்சாவளி மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது 2027-28 கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.

அதேபோல் இத்தாலியின் கல்வி முறையில் இணைய சிரமப்படும் வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர் களுக்கு இத்தாலிய மொழிப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டம், வெளிநாட்டு குடும்பங்கள் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து உள்ளன.

இந்த சட்டம் மீதான வாக்கெடுப்பின் போது, பள்ளியில் யாரும் அந்நியர் அல்ல என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *