May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தேர்தலில் வெற்றிபெற்றால் நிறைவேற்றப்பட்ட பெண்கள் நல்வாழ்வு திட்டங்கள்- கமல்ஹாசன் அறிவிப்பு

1 min read

Women’s welfare schemes implemented if they win the election – Kamal Haasan announcement

3.3.2021
தமிழக சட்டசபைத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிபெற்றால் நிறைவற்றப்பட இருக்கம் பெணகள் நல்வாழ்வு திட்டங்களை கமல்ஹாசன் வெளியிட்டார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

7 திட்டங்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெண்கள் நல்வாழ்வுக்கு 7 செயல்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • அரசு சேவையில் இருக்கும் சீருடைத்துறையில் 50% பெண்கள் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்.
  • துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவில் தங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசரகால இலவச விடுதிகள் அமைக்கப்படும்.
  • பெண்களால்… பெண்களுக்காக… பெண்களுக்கென்று… இயங்கும் மகளிர் வங்கிகள் உருவாக்கப்படும்.
  • தனித்து வாழும் தாய்மார்களுக்கு கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
  • ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை பெண்களுக்கு இலவச ஆரோக்கியம், கருத்தரிப்பு பரிசோதனை செய்யப்படும்.
  • மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமையும்போது 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.

பணி உத்தரவாதம்

  • பட்டதாரிகளுக்கு வசிப்பிடத்தில் இருந்து 100 சதுர கி.மீ. தொலைவிற்குள் பணி உத்தரவாதம் வழங்கப்படும்.
  • மக்களிடையே ஒழுக்கம், நேர மேலாண்மையை ஊக்குவிக்க ஆரோக்கியமான தமிழகம் இயக்கம் தொடங்கப்படும்.
  • ஒலிம்பிக் வீரர்களை வெளிக்கொண்டுவர ஒவ்வொரு பஞ்சாயத்து அளவிலும் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.