May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 6 தொகுதி

1 min read

DMK 6 volumes for the Liberation Tigers of Tamil Eelam in the alliance

4.3.2021
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள்

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவிட்டன. கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே ஏற்கனவே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இன்று ( வியாழக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

திமுக கூட்டணியில் விசிக – 6, ஐ.யூ.எம்.எல். – 3, ம.ம.க. – 2 ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

4.3.2021

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியை நியமிக்கும் வகையில் ஆவணங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தது.
இந்த நிலையில், இன்று நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.
விசாரணை நடத்திய ஒரு நீதிபதி சத்தியநாராயணா தனது உத்தரவில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி கூறினார்.
ஆனால் இன்னொரு நீதிபதியான ஹேமலதா இதில் “வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதால் பயன் இல்லை, எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3-வது நீதிபதி விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.