June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

1 min read

ADMK. Preliminary candidate list release

5.3.2021

அ.தி.மு.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடம்பெற்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆதயத்தமாகிவிட்டன. பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
முக்கிய கட்சிகள் வேட்பாளர் தேர்வை நடத்துகின்றன. அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு வினியோகிக்கப்பட்டு வருகிறது. விருப்ப மனு வினியோகம் 3-ந்தேதியுடன் முடிவடைந்தது.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ் மகன் உசேன், செய்தி தொடர்பாளர் பா.வளர்மதி, மருத்துவரணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் உள்பட நிர்வாகிகள் அடங்கிய ஆட்சி மன்ற குழு, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுடன் நேர்காணல் நடத்தியது.

8200 பேரை 15 பிரிவுகளாக பிரித்து நேர்காணல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த நேர்காணல் இரவு 8.30 மணிக்கு முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஆட்சி மன்றக்குழு நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

வேட்பாளர் பட்டியல்

இந்த நிலையில் அ.தி.மு.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது: அதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 4 அமைச்சர்கள்இடம் பெற்று உள்ளனர்.

போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி
ராயபுரம் – ஜெயக்குமார்
விழுப்புரம் – சி.வி.சண்முகம்
ஸ்ரீவைகுண்டம் – சண்முகநாதன்
நிலக்கோட்டை – தேன்மொழி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *