May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

ம.தி.மு.கவுக்கு 6 தொகுதிகள்; உதயசூரியன் சின்னத்தில் போட்டி

1 min read

6 constituencies for MDMK; Competition in the rising sun symbol

6.3.2021
ம.தி.மு.கவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சியினர் போட்டியிடுகிறார்கள்.

தி.மு.க. கூட்டணி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. இதுவரை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ம.தி-.மு.க.

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ம.தி.மு.க.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஏற்கமுடியவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்க முடியும் என்று தி.மு.க. திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால், முதல் சுற்று பேச்சுவார்த்தை ம.தி.மு.க.வுக்கு மனக்கசப்பாக அமைந்தது. தி.மு.க. தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை வைகோவிடம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், தி.மு.க. தரப்பில் இருந்து மீண்டும் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர் அதிலும் முடிவு எட்டப்படவில்லை

இந்த பேச்சுவார்த்தையில், தங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும் என்ற மனநிலையில் ம.தி.மு.க. குழுவினர் தி.மு.க. குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 20 நிமிடங்களில் முடிவடைந்தது.

தி.மு.க. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், 2-ம் சுற்று பேச்சுவார்த்தையும் ம.தி.மு.க.வினருக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

மதிமுக 10 தொகுதிகள் வரை எதிர்பார்கிறது. ஆனால், திமுக தரப்பில் 4 தொகுதிகள் வரையே ஒதுக்க முன்வந்துள்ளதுடன், திமுக சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. திமுகவின் அணுகுமுறையால் மதிமுக கடும் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை, தலைமை அலுவலகத்தில் மதிமுக உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. இதில் பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்து என்ன செய்யலாம் என்று அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

6 தொகுதிகள்

இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று உறுதி செய்யப்பட்டு விட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.