May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

அதிமுக.வில் 3 அமைச்சர்கள் உள்பட பல எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் இல்லை

1 min read

Many MLAs, including 3 ministers in the AIADMK, do not have seats

10.3.2021

அ.தி-மு.க. வேட்பாளர்கள் பட்டியலில் 3 அமைச்சர்கள் உட்பட பல எம்எல்ஏ.,க்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை.

வேட்பாளர் பட்டியல்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்டபாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இன்று 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுவரை மொத்தம் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.
இனி மீதி உள்ள தொகுதிகளில் பெரும்பாலும் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கே கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அல்லது ஒன்றிரண்டு தொகுதி வேண்டுமானால் இன்னும் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நிறைவு பெற்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
கடந்த முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலானோர்களுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனித் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம்.ஆனந்தன், செ.தாமோதரன், நத்தம் விசுவநாதன், கு.ப.கிருஷ்ணன், பரஞ்ஜோதி, வைகைச்செல்வன், இசக்கி சுப்பையா, பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, கோகுல இந்திரா, பா.வளர்மதி, சின்னய்யா, வி.சோமசுந்தரம், கே.பி.முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.வி.ராமலிங்கம், ஏ.கே.செல்வராஜூ ஆகியோருக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எம்.பிக்கள்

மேலும் அதிமுக ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோருக்கு சட்டசபையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், நிலோபர் கபில், பாஸ்கரன், வளர்மதி ஆகிய 3 அமைச்சர்கள், மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை உள்பட பல எம்.எல்.ஏ.,க்களுக்கு தற்போதைய பட்டியலில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜெயலலிதா இருந்தபோது அதிரடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதுபோலவே இப்போதும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.