May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

இலங்கையில் போர் குற்றம்; ஐ.நா.வில் இலங்கை எதிரான தீர்மானம் வெற்றி; இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை

1 min read

War crime in Sri Lanka; UN resolution against Sri Lanka wins; India did not participate in the referendum

23.3.2021
ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட போர்க்குற்ற தீர்மானம் வெற்றி பெற்றது. இந்த தீர்மானத்தில் இருந்து விலகிய இந்தியா ஓட்டுப்போடவில்லை.

இலங்கை மீது போர் குற்றம்

இலங்கையில் விடுதலைப் புலிகள் மீதான கடைசி தாக்குதலில் இலங்கை போர் விதிமுறை மீறியுள்ளது. லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.
இதனால் இலங்கை மீது ஐ.நா. சபையில் மனித உரிமை மீறல் பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இது தொடர்பாக 2 முறை தீர்மானம் கொண்டு வந்தும் தீர்மானம் தோல்வி அடைந்தது. அதாவது இலங்கை வெற்றிபெற்றது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில், இலங்கை உள்நாட்டு போரில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை விசாரணை நடத்த வேண்டும் என பிரிட்டன், கனடா, ஆகிய நாடுகள் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் இந்தியா ஓட்டுப்போட வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின.

தீர்மானம் வெற்றி

இந்த தீர்மானத்தின் மீது இன்று ஓட்டெடுப்பு நடந்தது. இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன், பிரேசில், ஜெர்மனி, உருகுவே உள்ளிட்ட 22 நாடுகள் ஓட்டு போட்டன. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் ஓட்டளித்தன.

இந்தியா, பஹ்ரைன்,நேபாளம், ஜப்பான், இந்தோனேஷியா, உள்ளிட்ட நாடுகள் ஓட்டுப்போடவில்லை.

இந்த நிலையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை விசாரித்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.