May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

காலமும் சரியில்லை…களமும் சரியில்லை…தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை- டி.ராஜேந்திரன்

1 min read

I do not support any party – T. Rajendran

28.3.2021

“காலமும் சரியில்லை…களமும் சரியில்லை…தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை” என்று- லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்திரன் கூறினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளும், அமைப்புகளும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தங்கள் ஆதரவை அளித்து வருகின்றன. ஆனால், சில அங்கீகரிக்கப்படாத கட்சிகளும், சில அமைப்புகளும் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காத நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்திரன் இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, டி.ராஜேந்திரன் கூறியதாவது:&
மறைந்த முதல்வர் அம்மா (ஜெயலலிதா) இல்லாமல் அதிமுக சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்ற தேர்தல் களம். அதேபோலவே மறைந்துவிட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் (கருணாநிதி) இல்லாமல் திமுக சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்ற தேர்தல் களம்.

இரண்டு கட்சிக்குமே அவரவருக்கு இருக்கிறது பலம். இது தவிர சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் பக்கபலம். அது தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பண பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக்கொள்ளப்போகிறார்கள் பலப்பரீட்சை. இதில் நான் போய் என்ன செய்யப்போகிறேன் புதுச்சிகிச்சை.
ஒவ்வொருவருடைய வார்த்தையில் இருக்கக்கூடிய வாக்கு வன்மை வார்த்தையில் இருக்கும் தன்மை அதில் வெளிப்படும் உண்மை அதற்கென்று ஒரு சக்தி இருக்கிறது என்று முன்னாள் முதல்வர்கள் சிலர் நம்பினார்கள் அதன் அடிப்படையில் என்னை பிரசாரத்திற்கு அழைத்தார்கள் அது ஒரு காலகட்டம்… ஆனால், இன்றைக்கு கொள்கையை எடுத்துச்சொல்லி ஓட்டுக்கேட்டதல்லாம் அந்தக்காலம் ஆனால், கொடுக்கவேண்டியதை கொடுத்து ஓட்டு பெற்றுவிடலாம் என்று நினைப்பது இந்தக்காலம்.
காலமும் சரியில்லை, களமும் சரியில்லை அதனால் கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். பத்தும்பத்தாததற்கு இது கொரோனா காலம்… பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அணிய வேண்டும் முகமூடி அதேபோல பக்குவப்பட்டவனாக இருக்க வேண்டுமென்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி… இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய லட்சிய திமுக யாரையும் ஆதரிக்கவும் இல்லை அரவணைக்கவும் இல்லை. நாங்கள் நடு நிலைமையோடு இருக்க விரும்புகிறோம். நாடும் நாட்டு மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

தஞ்சையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம்
28.3.2021
தஞ்சையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் கோவிந்த ராவ் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு கொரோனா

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
தஞ்சையில் ஏற்கனவே 14 பள்ளிகளில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் மேலும் 2 பள்ளிகளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தஞ்சாவூ?? மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அரசாங்கம் அறிவித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.