May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,089 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 2,089 people in Tamil Nadu today

28.3.2021

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை தெரிவித்ததாவது:&
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 2,089 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 8,77,279 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 259 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 85,173 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 92 லட்சத்து 62 ஆயிரத்து 447 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 1,287 பேர் ஆண்கள், 801 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,29,825 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,47,418 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.

9 பேர் பலி

தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் 4 பேர், புதுக்கோட்டையில் 2 பேர், செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த பலி எண்ணிக்கை 12,659ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 1,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,52,463 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் 12,157 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று 84,759 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

மாவட்ட வாரியாக…

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் – 6
செங்கல்பட்டு – 186
சென்னை – 775
கோவை – 185
கடலூர் – 43
தர்மபுரி – 6
திண்டுக்கல் – 20
ஈரோடு – 32
கள்ளக்குறிச்சி – 5
காஞ்சிபுரம் – 82
கன்னியாகுமரி – 22
கரூர் – 9
கிருஷ்ணகிரி – 19
மதுரை – 38
நாகை – 51
நாமக்கல் – 20
நீலகிரி – 19
பெரம்பலூர் – 1
புதுக்கோட்டை – 16
ராமநாதபுரம் – 6
ராணிப்பேட்டை – 24
சேலம் – 55
சிவகங்கை – 21
தென்காசி – 8
தஞ்சாவூர் – 66
தேனி – 5
திருப்பத்தூர் – 15
திருவள்ளூர் – 110
திருவண்ணாமலை – 9
திருவாரூர் – 38
தூத்துக்குடி – 9
திருநெல்வேலி – 26
திருப்பூர் – 59
திருச்சி – 45
வேலூர் – 19
விழுப்புரம் – 21
விருதுநகர் – 17

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.