“உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான்” – ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்
1 min read“The real Jallikattu hero is Prime Minister Modi” -O. Panneerselvam praised
30.3.2021
உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.
ஓ.பன்னீர் செல்வம்
தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
பிரதமர் மோடியால் இந்தியா உலக அளவில் முன்னேறி உள்ளது. இந்தியாவை இருளுக்குள் தள்ளிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ், திமுக கூட்டணி தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
காங்கிரஸ§ம் திமுகவும் சேர்ந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆண்டன. ஆனால், அவ்விரு கட்சிகளும் இந்தியாவுக்கு எவ்வித பிரம்மாண்டமான திட்டங்களையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. தமிழகத்துக்கும் எந்த திட்டத்தையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை.
காங்கிரஸ் – திமுக ஆட்சியில் இருந்த போதுதான் காளை, விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன்காரணமாகத்தான் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதனை கண்டித்து மெரினா கடற்கரையில் போராட்டம் நடந்து. இந்த போராட்டம் அமெரிகா உள்பட பல நாடுகளுக்கு தெரிய வந்தது. அப்போது நான் முதல் அமைச்சர். நான் டெல்லி சென்று பிரதமரிடம் எடுத்துகூறினேன். அவர் 24 மணி நேரத்தில் 4 துறைகளின் ஆணைகள் மூலம் ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிந்தார். இதன் பெருமை மோடியையே சாரும். உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.