தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா
1 min read
Corona for one person in Tamil Nadu today
5.4.2021
தமிழகத்தில் இன்று 3,581 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:—&
தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 3,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 99 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 21,958 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா உள்ளவர்களில் இன்று ஒரே நாளில் 1,817 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 65 ஆயிரத்து 071 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் வாரியாக…
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் – 7
செங்கல்பட்டு – 297
சென்னை – 1344
கோவை – 315
கடலூர் – 79
தர்மபுரி – 12
திண்டுக்கல் – 41
ஈரோடு – 41
கள்ளக்குறிச்சி – 7
காஞ்சிபுரம் – 124
கன்னியாகுமரி – 32
கரூர் – 21
கிருஷ்ணகிரி – 43
மதுரை – 58
நாகை – 77
நாமக்கல் – 33
நீலகிரி – 23
பெரம்பலூர் – 8
புதுக்கோட்டை – 29
ராமநாதபுரம் – 11
ராணிப்பேட்டை – 26
சேலம் – 64
சிவகங்கை – 28
தென்காசி – 36
தஞ்சாவூர் – 136
தேனி – 16
திருப்பத்தூர் – 8
திருவள்ளூர் – 163
திருவண்ணாமலை – 29
திருவாரூர் – 76
தூத்துக்குடி – 15
திருநெல்வேலி – 36
திருப்பூர் – 105
திருச்சி – 150
வேலூர் – 43
விழுப்புரம் – 20
விருதுநகர் – 27