May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

“அதிக மார்க் எடுக்க வேண்டும் என்று குழந்தைகளை பெற்றோர் வற்புறுத்த கூடாது”; மோடி அறிவுரை

1 min read

“Parents should not force children to take high marks”; Modi’s advice

7.4.2021
பெற்றோர் குழந்தைகளை அதிக மார்க் எடுக்கச் சொல்லி வற்புறுத்தக்கூடாது என்று பிரதமர் மோடி அறிவுரை கூறினார்.

தேர்வுகள் பற்றிய கவலை மற்றும் பயத்தை போக்கம் முயற்சியாக மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.
‘பரிக்ஷாபி சர்ஷா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இணைய வழியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,

‘பரிக்ஷாபி சர்ஷா’ நிகழ்ச்சி காணொலி காட்சி வழியில் நடைபெறுவது இது தான் முதல்முறை. கடந்த ஒரு வருடமாக நாம் கொரோனாவுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்களை நேரடியாக சந்திக்காததால் உங்களின் உற்சாகத்தை பெறமுடியாதது எனக்கு பெரிய இழப்பாக உள்ளது.

நீங்கள் உங்கள் தேர்வுகளை நன்கு அறிவீர்கள். தேர்வுகள் திடீரென்று வருவதல்ல. அப்படியென்றால் நீங்கள் தேர்வுகளை பார்த்து பயப்படுவதில்லை. ஆனால் வேறு சில உள்ளன. தேர்வுகள் தான் அனைத்தும் என்ற சூழ்நிலை உங்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் மிகப்பெரிய நிகழ்வு, மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க உள்ளது போன்ற சூழ்நிலையை சில நேரங்களில் பள்ளிகள், பெற்றோர், உறவினர்கள் உருவாக்குகின்றனர். நான் அவர்களிடம் ஒன்றை கூறிக்கொள்கிறேன். குறிப்பாக பெற்றோரிடம் கூறுவது என்னவென்றால் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் செய்வது பெரிய தவறு என்று நான் நினைக்கிறேன். தேவைக்கு அதிகமாகவே நாம் கவனமாக இருந்துகொண்டு அதிகப்படியாக சிந்திக்க தொடங்கிவிட்டோம்.

தேர்வு ஒன்றும் இறுதியல்ல என்று நான் நினைக்கிறேன். வாழ்க்கை மிக நீளமானது. தேர்வு என்பது சிறிய நிறுத்தம் தான். மாணவர்களிடம் நாம் அழுத்தத்தை உருவாக்கக்கூடாது.

மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல. தேர்வு என்பது மட்டும் வாழ்க்கை அல்ல. அளவுக்கு அதிகமாக யோசிப்பதால் தான் பயம் வருகிறது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால், உண்மையான திறமை வெளிவருவதில்லை’ என்றார்.
-==

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.