பழைய குற்றால அருவி வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் பலி- 5 பேர் மீட்பு
1 min read
5 people trapped in Old Kurthala waterfall flood – What is the fate of the boy?
17.5.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஐந்து பேர்களை வெள்ளம் இழுத்துச் சென்ன நிலையில் 4 பேர் மீட்கப்பட்டனர். சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான்.
தென்காசி மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை மற்றும் மிகவும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த நான்கு நாட்களாக கனமழை எச்சரிக்கை குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை என்றும் பொதுமக்கள் அருவிப்பகுதிக்கு வர வேண்டாம் என்றும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணிமுதல் குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையினால் பிற்பகல் 2 மணி அளவில் பழைய குற்றால அருவி, மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வேக வேகமாக அப்புறப்படுத்தினார்கள்.
இந்நிலையில் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட தீடீர் வெள்ள பெருக்கினால் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திக் கொண்டு வெள்ளம் பாய்ந்து வந்தது. சிறிது நேரத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. வெள்ளப்பெருக்கில் ஐந்து பேர் சிக்கினார். இது குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் கிஷோர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் விரைந்து சென்றனர்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இவர்களுக்கு ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி. சுடலையாண்டி, ஊராட்சி மன்ற செயலாளர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் ஆயிரப்பேரி ஊர் பொதுமக்கள் உதவி புரிந்தனர்.
மேலும் வேறு யாரேனும் வெள்ளத்தில் சிக்கினார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பழைய குற்றாலத்தில் முகாமிட்டு மீட்பு பணியை பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன
நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) என்ற சிறுவனை காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அருவியலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இரட்டை கால்வாய் பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது