கொரோனா பரவல்: மதுரையில் 18 தெருக்கள் மூடல்
1 min read
Corona distribution: 18 streets closed in Madurai
8/4/2020
கொரோனா பரவல் காரணமாக, மதுரையில் 18 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்திலும் நாள்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மதுரையிலும், தினசரி சராசரியாக 100 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து அதிகம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட தெருக்களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் படிப்படியாக மூடி வருகின்றனர். தற்போது வரை திருப்பாலை, கேகே நகர், விளாங்குடி, வில்லாபுரம், பல்லவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 18 தெருக்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த தெருக்களில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது. வெளியே இருந்து உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படாது என தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், அங்கு வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்தனர்.