May 11, 2024

Seithi Saral

Tamil News Channel

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம்; – தமிழக அரசு உத்தரவு

1 min read

Extra charge for bonding on auspicious days; – Government of Tamil Nadu order

13/4/2021

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பத்திரப்பதிவு

அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில் சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்கள் பத்திர பதிவு செய்ய ஏதுவாக இருக்கும். ஆகையால் மங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும்.
மேலும், அத்தகைய நாள்களில் பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.