May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழ் புத்தாண்டில்தரணி செழிக்கட்டும்

1 min read

May the Tamil New Year prosper
இந்த தமிழ்புத்தாண்டு சிறப்பாக அமைய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். அறிவியல் ரீதியாக சூரியனை பூமி சுற்றிவர ஓராண்டு காலம் ஆகும். ஜோதிட ரீதியில் சூரியன் பனிரெண்டு ராசிகளிலும் வலம் வர ஓராண்டு ஆகும். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் காலம் தங்கி இருப்பார். அப்படி சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாள்தான் தமிழ்புத்தாண்டு. சூரியன் நமக்கு நேர் கிழக்கே நிற்கும் நாள். கடந்த ஆறுமாதகாலம் வடதிசை நோக்கி பயணம் செய்து திரும்பி மையப்பகுதிக்கு வந்திருக்கும் நாள். இனி சூரியன் தென் திசைநோக்கி பயணம் மேற்கொள்ளும். அதன்பின் சூரியன் மீண்டும் ஐப்பசி மாதம் 1-ந் தேதி இதே இடத்திற்கு வரும். எனவே சித்திரை மற்றும் ஐப்பசி 1-ந் தேதியை நாம் சிறப்பான நாளாக கொண்டாடி வருகிறோம். அதாவது சித்திரை விசு, ஐப்பசி விசு என்று இந்த நாளை அழைக்கிறோம். கேரளாவில் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். சபரிமலை அய்யப்பன் கோவிலிலும் நடை திறக்கப்பபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த புனித நாளில் புண்ணி தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு. இந்த பிலவ ஆண்டில் முக்கிய கிரகங்களாக குருபகவான், ராகு&கேது ஆகியோர் இடப்பெயர்ச்சி அடைகிறார்கள். மேலும் சனிபகவானும் வக்கிரம் அடைகிறார். இப்படி முக்கிய கிரகங்கள் இடமாற்றம் பெறுவதால் பலன்கள் வெவ்வேறுவிதமாக நடக்கும். ஆனால் அந்த வெவ்வேறு பலன்களும் நல்லவிதமாக நடக்க வேண்டும். அதற்கு இறைவன் உதவவேண்டும். அதற்கு இந்த சித்திரை முதல் நாளை வழிபாட்டு நாளாக கொண்டாட வேண்டும். புண்ணிய தலங்களுக்குச் சென்று புனித நீராடி சாமி தரிசனம் செய்யலாம். அப்படி செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே இறைவனை வழிபடலாம்.
இந்த புத்தாண்டில் அனைவரும் சிறப்பான வாழ்வை பெற்று தரணி செழிக்க வாழ்த்துகிறோம். அதற்கு இறைவன் அருள் வழங்க வேண்டுகிறோம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.