தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ஆணையத்தின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில்
1 min read
Thoothukudi shooting; Actor Rajinikanth answers questions from the Commission
22/4/2021
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஆணையத்தின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த்துக்கு நோட்டீஸ்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி நடிகர் ரஜனிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் அவர் ஆணையம் முன்பு ஆஜராக விளக்கம் அளிக்கம்படி நோட்டீஸ் அனுப்பியது.
பதில்
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, விசாரணை ஆணையத்தின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். ரஜினிகாந்திடம் விசாரணை ஆணையம் சார்பாக 15 கேள்விகள் கேட்கப்பட்டன அந்த 15 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார் என்று அருணா ஜெகதீசன் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியுள்ளார். மேலும், ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.