June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவை விரட்ட தீப்பந்தத்தை கொளுத்திய கிராம மக்கள்

1 min read

The villagers lit a fireball to drive out the corona

22/4/2021

கொரோனாவை விரட்ட இரவு நேரத்தில் கைகளில் தீப்பந்தத்தை கொளுத்திய படி ‘ஓடு கொரோனா ஓடு’ என கிராமக்கள் ஓடிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரசேதத்தில் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தை அடைந்துள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றால் நாடு தள்ளாட்டத்தை சந்தித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனா பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை விட பல கிராமங்களில் வேப்பிலையை வீடுகளில் வைத்தார்கள். சில கிராமங்களில் மஞ்சள் தண்ணீரை வீதிகளில் தெளித்தார்.

தீப்பந்தம்

அதேபோல் மத்திய பிரதேச மாநிலம் அகர் மல்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மக்கள் இரவு நேரத்தில் கைகளில் தீப்பந்தத்தை கொளுத்திய படி ‘ஓடு கொரோனா ஓடு’ என இந்தியில் கத்திக் கொண்டு ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *