May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

சுப்ரீம்கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்றார்

1 min read

NV Ramana has taken over as the new Chief Justice of the Supreme Court

24.4.2021
சுப்ரீம் கோர்ட்டின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி ரமணா பொறுப்பேற்றுக்கொண்டார்.

என்.வி.ரமணா

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த போப்டேவின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இவரது பதவி காலம் நிறைவடையும் சூழ்நிலையிலேயே புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்று பரிந்துரை செய்யும்படி தலைமை நீதிபதி போப்டேவை ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அவர் மூத்த நீதிபதி என்.வி.ரமணாவின் பெயரை பரிந்துரைந்திருந்தார்.
அதன்படி அவரை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். போப்டே பதவி காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று காலை என்.வி. ரமணா, சுப்ரீம் கோர்ட்டின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதிவரை,என்.வி. ரமணா சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார்.

ஆந்திராவைச் சேர்ந்தவர்

என்.வி. ரமணா 1957ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொன்னாவரம் என்ற ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். 1983 பிப்ரவரி 10-ந் தேதி அவர் வழக்குரைஞர் பணியைத் தொடங்கினார். 2017 பிப்ரவரி 2-நங தேதி அவர் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சந்திரபாபு ஆந்திர முதல்மந்திரியாக இருந்தபோது அம்மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்தார்.

பி.எஸ்சி. பி.எல். படித்த அவர் ஆந்திர ஐகோர்ட்டில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குரைஞராகப் பணியாற்றிய அவர், பல அரசு முகமைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் பட்டியலில் இடம் பெற்றவர். 2000ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி ஆந்திரப் பிரதேச ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அங்கு தற்காலிகத் தலைமை நீதிபதியாக 2013ல் ஓரிரு மாதங்கள் பணியாற்றினார். பிறகு டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றார். அதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.