May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

மாநில அரசுகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்;மத்திய அரசு அறிவிப்பு

1 min read

State Governments will be given free corona vaccine; Federal Government Notice

24/4/2021-

மாநில அரசுகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தடுப்பூசி

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டகோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்பத்தில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுபூசி போட முன்னுரிமை வழங்கப்பட்டது.
அதன்பின் 60 வயது கடந்தவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. வருகிற 1-ந் தேதி முதல் 18 வயதை தாண்டியவர்கள் தடுப்பூசி போடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணியை மத்திய அரசு முடுக்கி உள்ளது.

இதற்கிடையே தடுப்பூசியின் விலை ஏற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தடுப்பூசிக்கான தேவை அதிகரித்திருப்பதை பயன்படுத்திக் கொண்ட சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு உயர்த்தியது. ரூ.250க்கு விற்கப்பட்டு வந்த தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும் விற்பனை செய்யப்படுமென சீரம் நிறுவனம் அறிவித்தது. ஆனால் தங்கள் உற்பத்தியில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு எப்போதும் போல ரூ.150 விலையில் வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த விலை பாகுபாட்டுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒரே மருந்துக்கு மூன்று விதமாக விலையை எப்படி நிர்ணயம் செய்யலாம் என்று அவர்கள் கூறினார்கள்.

இலவசமாக….

இந்த நிலையில் மாநில அரசுகளின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.