May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா பரவல் அதிகரிப்பு-பிரியங்கா காந்தி, உ.பி. அரசுக்கு 10 ஆலோசனைகள்

1 min read

Corona spread increase-Priyanka Gandhi, U.P. 10 suggestions to the government

27.4.2021
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசுக்கு பியங்கா காந்தி 10 ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் கொரோனா

உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 33 ஆயிரத்து 574 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 20 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்படவர்களில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து இதுவரை 8 லட்சத்து 4 ஆயிரத்து 563 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 249 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.

குற்றச்சாட்டு

இதற்கிடையில், உத்தரபிரதேசம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாகவும், அம்மாநில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக பரவலான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. மேலும், கொரோனா பரவல் தொடர்பாக தகவல்களை மறைப்பதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

10 ஆலோசனைகள்

இந்த நிலையில், கொரோனா பரவலை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக உத்தரபிரதேச அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பியங்கா காந்தி 10 ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவை வருமாறு:-

  • சுகாதார, முன்கள் பணியாளர்களுக்கு சிறப்பு நிதி-பொருளாதார திட்டத்தை அறிவித்தல்
  • மூடப்பட்ட கொரோனா மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களை திறந்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்துதல். ஓய்வு பெற்ற மருத்துவபணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துதல்.
  • கொரோனா பாதிப்பு தகவல்களை உ.பி. அரசு மறைக்கக்கூடாது. உள்ளூர் நிர்வாகம் மூலம் தகன இடங்களில் விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்துதல்
  • ஆர்டிபிசிஆர் முறையில் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும். கிராமங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்க வேண்டும்

அங்கன்வாடி பணியாளர்கள்

  • கிராமங்களில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்க அங்கன்வாடி பணியாளர்களை பயன்படுத்த வேண்டும்
  • அனைத்து மாவட்ட தலைமையிடங்களில் மருத்துவ ஆக்சிஜன் வசதி போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
  • ஊரடங்கால் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புயுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்
  • கொரோனா தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அதிகரிக்க வேண்டும். 40 கோடி ரூபாய் மட்டுமே தடுப்பூசி பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அது 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.

வரிச்சலுகை

  • மக்களுக்கு உள்மாநில வரிச்சலுகை அளிக்க வேண்டும்
  • அனைத்து துறையில் இருந்து உத்தரபிரதேச அரசு உதவிகளை கேட்டுப்பெற வேண்டும்.

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.