May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா நோயாளி உடலை ஆட்டோ ரிக்சாவில் ஏற்றி சென்ற அவலம்

1 min read

It is a pity that the corona patient’s body was loaded on an auto rickshaw

27.2021
பஞ்சாப்பில் கொரோனா நோயாளி உடலை தகனத்திற்கு ஆட்டோ ரிக்சாவில் கொண்டு சென்றது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா நோயாளி

நாட்டில் கொரோனா பாதிப்புகள் ஒரு புறம் அதிகரித்து வரும் சூழலில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், அவற்றுக்கு இறுதி சடங்குகள் செய்வதிலும் பல இடங்களில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

கொரோனா நோயாளிகள் உயிரிழந்து விட்டால் அவர்களை மாநகராட்சி ஊழியர்களே ஆம்புலன்சில் கொண்டு சென்று இறுதி சடங்குகளை செய்கின்றனர். அந்த உடல்கள் உறவினர்களிடம் கூட ஒப்படைக்கப்படுவது இல்லை.

இதற்காக மாநகராட்சி ஊழியர்கள் முறையான பாதுகாப்பு உடைகளை அணிந்து செல்ல வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

ஆட்டோவில்…

இந்த சூழலில் பஞ்சாப்பின் லூதியானா நகரில் கொரோனா நோயாளி ஒருவரது உடலை ஆட்டோ ரிக்சாவில் ஏற்றி கொண்டு இறுதி சடங்கு செய்வதற்கு சென்றது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து சர்ச்சையானது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி இணை ஆணையாளர் சுவாதி திவானா தெரிவித்து உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.