May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

சொன்னதை நிறைவேற்றி விட்டேன்; அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகுகிறேன்; பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

1 min read

I have fulfilled what was said; I am retiring from political strategy; Announcement by Prasanth Kishore

2/5/2021

மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரசும், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இது மகிழ்ச்சியை தருகிறது, எனினும் எனது வியூக நிபுணர் பணியில் இருந்து விலகுகிறேன் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர்

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் வகுத்துக் கொடுத்தது.

இந்தநிலையில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்துக் கொடுத்த மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று உள்ளது.

விலகுகிறார்

இதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்கட்சி அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

மேற்குவங்கத் தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என்ற எண்ணம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் நான் தொடக்கத்தில் இருந்தே கூறி வந்தேன். அது தான் நடந்துள்ளது. எல்லா தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று விடாது.

பிரதமர் மோடியின் பிரபலத்தை வைத்துக் கொண்டே எல்லாத தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாது. இதனை உணர்ந்து கொள்ளக் கூடாது. தமிழகத்திலும் திமுக வெற்றி பெற்றது. மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது. நான் கூறியபடியே பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை.
இருந்தாலும் நான் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போகிறேன். 9 ஆண்டுகள் இந்த பணியை செய்து விட்டேன். போதும், இனிமேல் நான் எனது குடும்பத்தினருடன் பொழுதை கழிக்க உள்ளேன். எனது ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் தொடர்ந்து நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.