இந்தியாவில் ஒரேநாளில் 3,92,488 பேருக்கு கொரோனா; 3,689 பேர் பலி
1 min read
Corona for 3,92,488 people in one day in India; 3,689 killed
2.5.2021
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 3,92,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,689 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. கடந்த 22-ந்தேதி முதல் 9 நாட்கள் தொடர்ந்து தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமாக கொரோன பதிவாகி வந்தது. நேற்று கொரோனா பதிவு 4 லட்சத்தை தாண்டி இருந்தது. ஆனால் இன்றைய பதிவு சற்று குறைந்துள்ளது.
கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் அதாவது ஒரே நாளில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 488 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 57 ஆயிரத்து 457 ஆக உயர்வடைந்து உள்ளது.
3,689 பேர் சாவு
நாடு முழுவதும் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 3,689 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,15,542 ஆக உயர்ந்து உள்ளது.
நேற்று மட்டும் 3 லட்சத்து 7 ஆயிரத்து 865 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 271 ஆக உயர்வடைந்து உள்ளது.
தற்போ நாடு முழுகூதும் 33,49,644 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியே 68 லட்சத்து 16 ஆயிரத்து 31 ஆக உள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.