June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

கோவை தெற்கு தொகுதியில் வானதி வெற்றி-கமல் தோல்வி

1 min read

Vanathi wins-Kamal defeat in Coimbatore South constituency

2.5.2021
கோவைத்தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றிப்பெற்றார்.கமல் தோல்வி அடைந்தார்.

கமல்

தமிழகசட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணியானது இன்று நடைபெற்றது. பெரும்பான்மையான இடங்களில் திமுகக் கைப்பற்றி ஆட்சி அரியணையைக் கைப்பற்றியுள்ளது.

இந்தநிலையில், கோவைத்தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் இன்று காலையில் இருந்தே முதலிடத்திலும், மயூரா ஜெயகுமார் இராண்டாம் இடத்திலும், வானதி சீனிவாசன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர். மதியத்திற்கு மேல் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் வானதி சீனிவாசன். நீண்ட நேரம் கமல்ஹாசன் முதலிடத்தில் நீடித்து வந்த நிலையில், மாலை வேளைக்குப்பின் வானதி சீனிவாசன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்.

கடந்த சில மணி நேரங்களாக இருவருக்கும் இடையே மிகசிறிய அளவிலான வாக்குவித்தியாசம் நிலவிவந்த நிலையில் தற்போது வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். கமல்ஹாசன் 51, 481வாக்குகளையும், மயூரா ஜெயகுமார் 42, 383 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.

எச்.ராஜா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஹெச்.ராஜாவை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடி போட்டியிட்டார்.இவதங 73 ஆயிரத்து 334 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஹெச். ராஜா 53 ஆயிரத்து 524 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதன் மூலம் காங்கரஸ் வேட்பாளரை விட பாஜகவின் ஹெச். ராஜா 19 ஆயிரத்து 810 வாக்குகள் பின் தங்கிய நிலையில் உள்ளார். இன்னும் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையே எஞ்சியுள்ள நிலையில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *