April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

நாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதத்திலும் 3-வது இடம்

1 min read

Naam thamilar party 3rd place of persentage share in Tamil Nadu

3.4.2020

தமிழக சட்டசபைத் தேர்திலல் தி.மு.க., அ.தி.மு.க. வை அடுத்து 3வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. வாக்குசதவீத்திலும் அது 3வது நிலையில் உள்ளது.

தி.மு.க. வெற்றி

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் – 4 இடங்களில் வெற்றி பெற்று உள்ளன

அதிமுக கூட்டணி – 75 இடங்களில் வெற்றி அதிமுக – 65 பாமக – 5 பாஜக – 4 இதர கட்சிகள் – 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எங்கும் வெற்றி பெறவில்லை.

மூன்றாவது இடம்

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்த நாம் தமிழர் கட்சி பல இடங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. நாம் தமிழர்தான் பல இடங்களில் மூன்றாவது இடம் பிடித்தது என்பதால் வாக்கு சதவிகித ரீதியாக அந்த கட்சி 3வது பெரிய கட்சியாக வாய்ப்புள்ளது. நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் 6.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை கொங்கு மண்டலத்தில் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் 2.4 சதவீதத்தையும், அமமுக 2.4 சதவீதத்தையும் பெற்று உள்ளது.

மற்ற கட்சிகள்

காங்கிரஸ் 4.28 சதவீதமும், பாட்டாளிமக்கள் கட்சி 3.80 சதவீதத்தையும், பா.ஜ.க. 2.63 சதவீதத்தையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1.3 சதவீதத்தையும், இந்தி கம்யயூனிஸ்டு 1.09 சதவீத்தையும், மார்ச்சிஸ்டு கம்யூனிஸ்டு 0,85 சதவீதத்தையும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 0.48 சதவீதத்தையும், தே.மு.தி.க. 0.43 சதவீதத்தையும், நோட்டா 0.75 சதவீதமும், மற்றவர்கள் 2 சதவீதமும் பெற்றுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.