தமிழகத்தில் இன்று 23,310 பேருக்கு கொரோனா; 167பேர் சாவு
1 min read
Corona for 23,310 people in Tamil Nadu today; 167 deaths
5/5/2021-
தமிழகத்தில் இன்று 23,310 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 167பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் நேற்று மட்டும் 1,55,382 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 23,310பேருக்கு கொரோனா உறுதியானது இன்று தெரியவந்துள்ளது. இவர்களில் 24பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 23,286பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,72,602ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 13,671பேர் ஆண்கள், 9,639பேர் பெண்கள். இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 7,67,616ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,04,948ஆகவும் அதிகரித்து உள்ளது.
20,062பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,29,512 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் ஒரே நாளில் 167பேர் கொரோனாவுக்கு இறந்தனர்.இவர்களையும் சேர்த்து, கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 14,779 ஆக அதிகரித்து உள்ளது.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நெல்லை
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் சென்னையில் 6,291 பேரும், கோவையில் 2,029 பேரும், செங்கல்பட்டில் 1,755 பேரும் திருவள்ளூரில் 1385 பேரும் அடங்குவர்.
நெல்லை மாவட்டத்தில் 653 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 215 பேருக்கும், தூத்துக்குடியி்ல் 741 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உ்ளளது.
சென்னையி்ல் இன்று அதிகபட்சமாக 58 பேரும், செங்கல்பட்டில் 16 பேரும், நெல்லையில் 4 பேரும், தென்காசியில் ஒருவரும், தூத்துக்குடியில் ஒருவரும் இறந்துள்ளனர்.