June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனா பாதிப்பில் இருந்து மும்பை தாராவி மீண்டு வருகிறது

1 min read

Mumbai Dharavi is recovering from corona damage

10.52021
மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 2 மாதத்திற்கு பிறகு ஒற்றை இலக்கத்தில், அதாவது புதிதாக 9 பேர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தாராவியில் கொரோனா

மராட்டியத்தில் ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பையிலும் பாதிப்பு வெகுவாக குறைந்து உள்ளது. இதிலும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் தொற்று நோய் பரவல் பன்மடங்கு குறைந்து உள்ளது.

2 மாதத்திற்கு பிறகு

அதன்படி 2 மாதத்ததிற்கு பிறகு நேற்று தாராவியில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி 9 பேர் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த மார்ச் 11-ந் தேதி 7 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன் பிறகு பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகம் எடுத்து கடந்த ஏப்ரல் 8-ந் தேதி அதிகபட்சமாக 99 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவது உழைக்கும் வர்க்கமான தாராவி மக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தாராவியில் 727 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5 ஆயிரத்து 561 பேர் குணமடைந்து உள்ளனர்.

தாராவியில் முதன் முறையாக கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் 1-ந் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சுமார் 2.5 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள தாராவியின் மக்கள் தொகை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *