May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவரின் மனைவி ராணுவத்தில் சேர்ந்தார்

1 min read

The wife of the man who was martyred in the Pulwama attack has joined the army

29.5.2021
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் விபூதி சங்கர் தவுந்தியாலின் மனைவி நிகிதா சவுல் நாட்டுக்காக பணியாற்ற ராணுவத்தில் சேர்ந்தார்.

புல்வாமா தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரா்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதி ஒருவா் வெடிப்பொருட்களை ஏற்றி வந்த வாகனத்தை மோதச் செய்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 40 வீரா்கள் பலியாகினா். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை தாக்கி அழித்தது.

வீரமரணம் அடைந்தவர் மனைவி

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் விபூதி சங்கர் தவுந்தியாலின் மனைவி நிகிதா சவுல் நாட்டுக்காக பணியாற்ற ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள், ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சியில், நிகிதா கவுல் ராணுவ உடையுடன் வந்து இந்திய ராணுவ வடக்கு கமாண்டர் ஜெனரல் ஒய்.கே.ஜோஷியிடம் நட்சத்திரத்தை அணிந்து கொண்டு முறைப்படி ராணுவத்தில் இணைந்துள்ளார்.

திருமணமாகி வெறும் 9 மாதங்களில் தனது கணவரை இழந்த நிகிதா, ராணுவத்தில் சேர்ந்ததன் மூலம் தனது கணவருக்கு உண்மையிலேய பெருமைப்படுத்தும் வகையில் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

கணவரை இழந்ததும் துக்கத்தில் துவண்டுவிடாமல், ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டார். சென்னையில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சியைத் தொடங்கி, தற்போது ராணுவத்தில் இணைந்து இந்தியப் பெண்களின் வீரத்துக்கு உதாரணமாக மாறியுள்ளார் நிகிதா கவுல்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.