இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது
1 min read
Pakistanis arrested for trying to cross Indian border
7.6.2021-
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
பாகிஸ்தானியர் கைது
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் நேற்று முன்தனிம் இரவு வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஒருவர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, எச்சரிக்கையுடன் செயல்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர் அந்த நபர் இந்திய எல்லைக்குள் நுழைந்த உடன் அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணை
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் காஷ்மீரில் எதேனும் தாக்குதல் நடத்த திட்டமிடிருந்தா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.