May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

80 சதவீதம் பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது; பிரதமர் மோடி தகவல்

1 min read

India imports 80 per cent of toys; Prime Minister Modi informed

24/6/2021
இந்தியாவில் 80 சதவீதம் பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதனால் நாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் விரையமாகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

பொம்மைகளுக்கான போட்டி

தற்சார்பு இந்தியாவாக உருவாகும் பாதையில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக, கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவை இணைந்து புதுமையான பொம்மைகளுக்கான போட்டி ‘டாய்கத்தான்-2021’ நடத்துகிறது.

டாய்கத்தான்-2021 போட்டியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக நேற்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் சஞ்சய் தோத்ரே ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

குழந்தைகளின் முதல் நண்பன்

கடந்த 5-6 ஆண்டுகளாக ஹேக்கத்தான் தளங்கள் வாயிலாக நாடு எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுடன் இளைஞர்கள் இணைந்திருக்கிறது. நாட்டின் திறன்களை ஒழுங்குப்படுத்துவதும், அவர்களுக்கு ஓர் தளத்தை உருவாக்குவதும் இதன் பின்னணியில் உள்ள எண்ணமாகும்.

குழந்தைகளின் முதல் நண்பன் என்ற முக்கியத்துவத்தையும் கடந்து “டாய்கானமி” ஆகும். சர்வதேச பொம்மை சந்தை சுமார் 100 பில்லியன் டாலர் அளவில் இருக்கிறது. ஆனால் இதில் இந்தியா வெறும் 1.5 சதவீதத்தைப் பெற்றிருக்கிறது.

80 சதவீதம்

சுமார் 80 சதவீதம் பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. நாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் விரையமாகிறது என்பதை இது குறிக்கிறது. இந்தப் போக்கு மாறவேண்டும். ஊரக மக்கள், தலித்கள், ஏழை மக்கள் மற்றும் பழங்குடியினத்தவரை உள்ளடக்கிய கலைஞர்களுடன் தனக்கே உரித்தான சிறு தொழிலை பொம்மை தொழில்துறை தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்தத் துறையின் பலன்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உள்ளூர் பொம்மைகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்திய பொம்மைகள் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு ஏதுவாக புதிய கண்டுபிடிப்புகளின் நவீன மாதிரிகள் மற்றும் நிதி ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.