3-வது திருமணத்துக்கு முயன்ற கணவரை கொன்ற 2-வது மனைவி
1 min read
2nd wife who killed husband who tried for 3rd marriage
26.6.2021
3-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிய கணவரின் பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்த 2-வது மனைவி கைது செய்யப்பட்டார்.
2 மனைவி
உத்தரபிரதேசம் முசாபர்நகர் ஷிகார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மவுலவி வகீல் அகமது ( வயது 57). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவி பெயர் ஹாஜ்ரா.
கடந்த சில நாட்களாக வகீல் அகமது மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி வந்தார். இதற்கு ஹாஜ்ரா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் கூர்மையான ஆயுதத்தால் வகீல் அகமதுவின் பிறப்புறுப்பை துண்டித்தார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட அதே இடத்தில் வகீல் உயிரிழந்தார். உடனடியாக ஹாஜ்ரா தனது உறவினர்களின் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்ய முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ஹாஜ்ரா குற்றத்தை ஒப்புக்கொண்டார்.