இந்தியாவில் புதிதாக 48,698 பேருக்கு கொரோனா; 1,183 பேர் பலி
1 min readCorona for 48,698 newcomers in India; 1,183 killed
26.6.2021
இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக 48 ஆயிரத்து 698 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனது.
1,183 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்திய நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை அதன் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தினசரி பாதிப்பு என்பது 50 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வருகிறது.
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடெங்கும் புதிதாக 48 ஆயிரத்து 698 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றின் தாக்குதலுக்கு நேற்று ஆளானவர்களை விட, அதில் இருந்து குணம் அடைந்து வீடுதிரும்பியோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது 44-வது நாளாக நடந்துள்ளது. 48 ஆயிரத்து 698 பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், 64 ஆயிரத்து 818 பேர் குணம் அடைந்து வெற்றிகரமாக வீடு திரும்பி இருக்கிறார்கள்.
இதுவரையில் நாடு முழுவதும் 2 கோடியே 91 லட்சத்து 93 ஆயிரத்து 085 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து இருக்கிறார்கள்.
1183 பேர் சாவு
கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலி, நேற்று ஒப்பிடுகையில் இன்று சற்று குறைந்தது. 1,183 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.
கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து நாடு முழுவதும் இறங்குமுகத்தில் உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாடெங்கும் 5 லட்சத்து 95 ஆயிரத்து 565 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.