April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

ஒடிசா கடற்கரையில் அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

1 min read

Agni-Prime missile test successfully off the coast of Odisha

28.6.2021

ஒடிசா கடற்கரையில் அணுசக்தி திறன் கொண்ட அக்னி-பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

ஏவுகணை

அக்னி ஏவுகணை வரிசையில், அக்னி-பிரைம் என்ற புதிய ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இன்று காலை 10.55 மணி அளவில், ஒடிசா கடற்கரையில் பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

அக்னி-பிரைம் ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை. இது அக்னி ஏவுகணைகளின் புதிய தலைமுறை மேம்பட்ட மாறுபாடாகும். இந்த அக்னி-பிரைம் ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்துசென்று தாக்குதல் நடத்தும் திறன் பெற்றதாகும்.

மேலும் இதுதொடர்பாக டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் கூறுகையில், “கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பல்வேறு டெலிமெட்ரி மற்றும் ரேடார் நிலையங்கள் ஏவுகணையைக் கண்காணித்தன. திட்டமிட்ட வழியில் பயணித்த ஏவுகணை, இந்த திட்டத்திற்கான அனைத்து நோக்கங்களையும் உயரிய துல்லியத்துடன் பூர்த்தி செய்தது. அக்னி-பிரைம் ஏவுகணை 1,000 கிலோ மீட்டருக்கும், 2,000 கிலோ மீட்டருக்கும் இடையிலான இலக்கைத் தாக்கும் திறன்கொண்டது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.