October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழக புதிய டி.ஜி.பி., சைலேந்திரபாபு

1 min read

The new DGP of Tamil Nadu, Silenthrababu

29/6/2021
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

டி.ஜி.பி.

தமிழகத்தின் தற்போதைய டி.ஜி.பி., திரிபாதியின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு புதிய டி.ஜி.பி.,யை தேர்ந்தெடுக்கும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. ஒரு டி.ஜி.பி.,யின் பதவிக்காலம் முடிவடையும் முன்னரே, அடுத்த டி.ஜி.பி.க்கான தகுதியுள்ள அதிகாரிகள் சிலரது பெயர்களை தேர்வு செய்து, அந்த பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு, தமிழக அரசு அனுப்பி வைப்பது வழக்கம்.

தகுதி, சீனியாரிட்டி உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில், அந்த பட்டியலை பரிசீலிக்கும் உள்துறை மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள். அவர்களில் இரண்டு அல்லது மூன்று பெயர்களை இறுதி செய்து, தமிழக அரசுக்கு பரிந்துரையாக அனுப்பி வைப்பர். அதிலிருந்து ஒருவரை தேர்வு செய்து, புதிய டி.ஜி.பி.,யாக தமிழக அரசு நியமிக்கும்.

சைலேந்திர பாபு

இந்நிலையில் தமிழக புதிய டி.ஜி.பி., தேர்வு குறித்த நடந்த ஆலோசனையின் போது தமிழக அரசால் வழங்கப்பட்ட பட்டியலில் மூன்று பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சைலேந்திர பாபு தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டார்.

சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையின் 1987 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார்.

வாழ்க்கை வரலாறு

சைலேந்திர பாபு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1962-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.
இவருடன் மொத்தம் 8 பேர் பிறந்தனர். இவர்ஆறாவது பையன். இவரது தந்தை இந்திய ராணுவ கப்பல் பிரிவில் பணியில் இருந்தார். அதன்பின், கேரள போக்குவரத்துத் துறையில் பணியில் இருந்தார். பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர். கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

அதன்பின் மதுரையில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில் விவசாயம் மற்றும் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றார். பிறகு கோவையில் உள்ள தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை படமும், மக்கள் தொகை கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
இவர் ஆய்வறிக்கை சென்னை பல்கலைகழகத்தில் தாக்கல் செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
கடந்த 2013-ம் ஆண்டு மனிதவள வணிக நிர்வாக படிப்பில் முதுகலை மட்டம் பெற்றார்.

சைலேந்திரபாபு ஐதராபாத் தேசிய காவல்துறை அகாடமியில் பயிற்சி பெற்று கடந்த 1987-ம் ஆண்டு இந்திய காவல்துறை அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.
1989ம் ஆண்டு அக்டோபர் மாதம் கூடுதல் காவல்துறை கண்பாளராக நியமிக்கப்பட்டார்.
1992ம் ஆண்டு ஜனவரி மாதம் போலீஸ் சூப்பிரண்டானார்.
2001ம் ஆண்டு மார் மாதம் டி.ஐ.ஜி. ஆக பதவி உயர்வு பெற்றார்.
2006ம் ஆண்டு டிசம்பர் 20ந் தேதி ஐ.ஜி. ஆனார்.
2012ம் ஆண்டு ஏப்ரல்மாதம் 23-ந் தேதி போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ஏ.டி.ஜி.பி.) ஆக பதவி உயர்வு பெற்றார்.

விருதுகள்

இவர் பல்வேறு விருதுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார். நக்சலைட் என்கவுண்டர் மூலம் பெரிதும் பாராட்டப்பட்டவர். 1997ம் ஆண்டு சிவகங்கையில் ஏரியில் கவிழ்ந்த பேருந்தில் இருந்து 18 பேரை உயிருடன் காப்பாற்றியதற்காக ஜானதிபதி விருது கடந்த 2005-ம் ஆண்டு கிடைத்தது. சிறந்த சேவை செய்தமைக்காக சிறந்த முன்னாள் மாணவர் விருது தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது. 2013ம் ஆண்டு சிறந்த சேவைக்காக ஜனாதிபதி போலீஸ் விருது வழங்கப்பட்டது.

சைலேந்திரபாபு படிப்பு மற்றுமின்றி எழுத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இவர் நூல்கள் எழுதியுள்ளார்.
விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சைலேந்திரபாபு. நீச்சல், தடகளம், துப்பாகிச்சுடுதல் , சைகிளிங் போன்றவற்றில் தீவிர பங்களிப்பால் நீச்சலுக்காகத் தேசிய போலீஸ் அகாடமி மூலம் “ஆர்.டி. சிங்” கோப்பையை பெற்றுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.