June 14, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா; 118 பேர் சாவு

1 min read

corona for 4,512 people in Tamil Nadu today; 118 deaths

29.6.2021

தமிழகத்தில் இன்று 4,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 118 பேர் உயிரிழந்து உள்ளனர். 6,013 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 39 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 48 நாட்களாக குறைந்து வருகிறது.

இது தொடர்பாக இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,75,190 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 2,599 பேர் ஆண்கள், 1,913 பேர் பெண்கள்.
இன்று 6,013 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,03,349 ஆக உயர்ந்துள்ளது.

118 பேர் சாவு

இன்று தமிழகத்தில் 118 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,506 ஆக அதிகரித்து உள்ளது.

கோவையில் இன்று 563 பேருக்கும், ஈரோட்டில் 493 பேருக்கும், சென்னையில் 275 பேருக்கும், செங்கல்பட்டில் 229 பேருக்கும், சேலத்தில் 302 பேருக்கும், தஞ்சையில் 215 பேருக்கும், திருப்பூரில் 281 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் இறந்துள்ளார். தென்காசியில் 34 பேர் இன்று பாதித்த நிலையில் இறப்பு இல்லை. தூத்துக்குடியில் இன்ற 59 பேர் பாதித்த நிலையில் 2 பேர் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.