திருமண ஊர்வலத்தில் சிலம்பம் சுற்றிய தூத்துக்குடி மணப்பெண்
1 min readThoothukudi bride around Silambam in wedding procession
30.6.2021
தூத்துக்குடியில் திருமண ஊர்வலத்தின் போது மணப்பெண் இரண்டு கைகளில் சிலம்பம் சுற்றி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணப்பெண்
அந்த காலத்தில் பெண்ணை ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க மணமகனின் வீரதீர செயலை பரிசோதிப்பார்கள். காளையை அடக்குதல், இளவட்டக்கல்லை தூக்குதல் போன்ற போட்டிகளில் பங்கேற்க சொல்வார்கள். பெண் பார்க்க செல்பவர்கள் பெண்ணுக்கு சமைக்க தெரியுமா? பாடத் தெரியுமா என்று கேட்பார்கள்.
ஆனால் இப்போது தலைகீழாக மாறிவிட்டது. உத்தியோகத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிக அளவில் சேருக்கிறார். பெரும்பாலான பெண்கள் வீரதீர செயலில் சாதனை புரிந்து வருகிறார்கள்.
சிலம்பம்
தூத்துக்குடியில் திருமண ஊர்வலத்தில் மணப்பெண் சிலம்பம் சுற்றி தன் சாதனையை காட்டினார்.
தூத்துக்குடியில் தேமான்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் – நிஷா தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில், மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அப்போது, மணப்பெண் நிஷா, மணக்கோலத்திலேயே இரண்டு கைகளில் அசாத்தியமாக சிலம்பம் சுற்றி அசத்தினார். அத்தோடு, பாரம்பரியக் கலையான சுருள் வாள் வீசியும் திருமணத்திற்கு வந்தவர்களை அசர வைத்தார்.