இந்தியாவில் மேலும் 44,111-பேருக்கு கொரோனா ; 738 பேர் சாவு
1 min read
Corona for a further 44,111 in India; 738 deaths
3/7/2021-
இந்தியால் கொரேனா ஒரு நாள் கொரோனா தொற்று 44,111 ஆக உறுதி செய்யப்பட்டு உள்ளத. ஒரே நாளில் 738 பேர் கொரேனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று காலையில் இந்தியாவில் ஒரேநாளில் 46,617 பேர் பாதித்துள்ளதாகவும், 853 பேர் இறந்துள்ளதாகவும் பதிவாகி இருந்தது. ஆனால் இன்று காலையில் இந்த பாதிப்பு குறைந்து இருந்தது.
இதுபற்றி ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 05 லட்சத்து 02 ஆயிரத்து 362- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 57,477 பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 96 லட்சத்து 05 ஆயிரத்து 779 ஆக உள்ளது.
738 பேர் சாவு
இந்தியாவில் ஒரே நாளில் 738 பேர் கொரோனா தொற்றுக்க உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 01 ஆயிரத்து 050- ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்து 533 ஆக சரிந்துள்ளது.
நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 34 கோடியே 46 லட்சத்து 11 ஆயிரத்து 291- ஆக உயர்ந்துள்ளது.