June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 4,230 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 4,230 people in Tamil Nadu today

2.7.2021
தமிழகத்தில் இன்று 4,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலகள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று புதிதாக 4,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,88,407 ஆக அதிகரித்துள்ளது.

97 பேர் சாவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,818 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 4,952 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,18,882 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 37,526 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் இன்று மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 486 பேருக்கும், ஈரோட்டில் 395 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை

நெல்லயில் இன்று 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் இறந்து உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 26 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 57 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று இறப்பு இல்லை,
தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *