June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தடுப்பூசி கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min read

MK Stalin’s letter to the Prime Minister asking for a vaccine

13.7.2021
தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக்கூறி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழகத்திற்கு கோவிட் தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால் மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிக்கான தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.

தமிழகத்திற்கு, மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி ஒதுக்கவில்லை. இதனால், பற்றாக்குறை நிலவுகிறது. மாநிலத்திற்கு ஆயிரம் பேருக்கு 302 பேர் என்ற முறையில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது இது மிகக்குறைவு. குஜராத், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முறையே 533,493 மற்றும் 446 என்ற முறையில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எனவே, தமிழகத்திற்கு ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும். மேலும், சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும். இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போட முடியும். தமிழகத்திற்கு மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்கவும், ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திடவும் வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.