June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளித்து தற்கொலை

1 min read
Woman commits suicide by setting herself on fire with 2 children near Kadayam
13.7.2021
 கடையம் அருகே குடும்பத்தகறாரில் இளம்பெண் தன் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 
 
குடும்பத் தகராறு
 
தென்காசி மாவட்டம் கடையம் அருகே செக்கடியூரை சேர்ந்தவர் சரவணன் என்னும் சுரேஷ் (வயது 32) இவருக்கும் தென்காசியை சேர்ந்த கவுரி என்ற கனகா (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 
 இவர்களுக்கு கீர்த்தனு (வயது 5) என்ற மகனும், இலக்கியா (வயது 2) என்ற மகளும் உள்ளனர்.
  சுரேஷ் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். 
 கணவன்-மனைவிக்கு இடையே  அடிக்கடி தகறாறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.  இதனால் கனகா தன்னுடைய கணவன் மீது ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் சுரேசை அழைத்து எச்சரித்து இருவரையும் சேர்ந்து வாழ அனுப்பிவைத்தனர்.

 தீக்குளித்து தற்கொலை

 போலீசாரின் அறிவுரைபடி அவர்கள் சேர்ந்து வாழ்ந்து நாட்களே ஆன நிலையில்  அவர்களுக்குள் மீண்டும்  தகறாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கனகாக தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். 
 இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை கனகா கதவை பூட்டிக்கொண்டு தன் இரு குழந்தைகள் மீதும் தன் மீதும் மண்எண்ணெயை உற்றி தீவைத்து கொண்டார். இதில் மூன்று பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 
 இதுபற்றிய கதவல் கிடைத்ததும்   கடையம் போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
 திருமணமாகி 6 வருடம் மட்டும் ஆகியபடியால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்ப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.